Map Graph

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில்

திருநெல்வேலியிலுள்ள உச்சிட்ட கணபதி கோவில்

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரில், உச்சிட்ட கணபதி மூலவராக அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் இதுவாகும். 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும் 'உச்சிஷ்ட கணபதி' அல்லது உச்சிட்ட கணபதி என்பது பிள்ளையார் 32 உருவ வேறுபாடுகளும் ஒன்று. மூலவர் உச்சிஷ்ட கணபதி தனது இடது தொடையில் அவரது மனைவி நீலவாணி (நீலசரசுவதி) உடன் அவரது துதிக்கை நீலவாணியின் வயிற்றுப் பகுதியில் படியுமாறு அமைந்த கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலின் தீர்த்தம், தாமிரபரணி ஆற்றின் ரிஷி தீர்த்தக் கட்டம் என்று அழைக்கப்படுகின்றது. பைரவ தீர்த்தம் கிணறு இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். வன்னி மரமும் பனை மரமும் இக்கோயிலின் தலவிருட்சங்கள் ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டி மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 65 இலட்சம் ரூபாய்க்கு புனரமைப்புப் பணித் திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read article
படிமம்:Uchista_ganapathi.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svg